×

குஜிலியம்பாறை சாலம்பட்டியில் மின்மோட்டார் அறை சாவியை பறித்து சென்றதால் குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் புகார்

குஜிலியம்பாறை, ஜன, 22: குஜிலியம்பாறை அருகே சாலம்பட்டியில் ஆப்ரேட்டரிடம் மின்மோட்டர் அறை சாவியை, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பறித்து சென்றதால் மோட்டரை இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து சாலம்பட்டி ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் சார்பில், கனகராஜ் என்பவர் கொடுத்துள்ள அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, குஜிலியம்பாறை ஒன்றியம், லந்தக்கோட்டை ஊராட்சி சாலம்பட்டி ஆதிதிராவிடர் காலனீயில் 35க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி குடிநீர் வசதிக்காக கடந்த 2009ம் ஆண்டு போர்வெல் போடப்பட்டது. பின்னர் மின்மோட்டார் மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த ராமநாதன் (52) என்பவர் தற்காலிக குடிநீர் ஆப்ரேட்டராக நியமனம் செய்யப்பட்டார்.  

இந்நிலையில் லந்தக்கோட்டை ஊராட்சி தலைவரின் கணவர் கடந்த ஜன. 14ம் தேதி, ஆதிதிராவிடர் காலனிக்குள் வந்து குடிநீர் மின்மோட்டார் அறை சாவியை பறித்து, அதை வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார். இதனால் மோட்டரை இயக்க முடியாமல் உள்ளதால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பறித்து சென்ற மின்மோட்டார் அறை சாவியை, மீண்டும் ஆதிதிராவிடர் காலனி மக்களிடமே வழங்கிட வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Tags : Salampatti ,Kuala Lumpur ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...