×

கோயில் திருவிழா தகராறில் சகோதரர்களுக்கு வெட்டு

களக்காடு, ஜன.22:  களக்காடு அருகே கோயில் திருவிழா தகராறில் சகோதரர்களை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள மேலதேவநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தவசிகனி மகன் மணிகண்டன்(22). இவர் நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த நெல்லையப்பன் மகன் இசக்கிமுத்துக்கும் கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் அங்குள்ள சந்தனமாரியம்மன் கோயில் அருகே நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிமுத்து, அவரை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டியும் கீழே தள்ளி தாக்கினார். இதைப்பார்த்த மணிகண்டனின் தம்பி வெங்கடேஷ்(20) ஓடி வந்து தடுத்தார். அவரையும் இசக்கிமுத்து அரிவாளால் வெட்டினார். பின்னர் கொலை மிரட்டலும் விடுத்து தப்பி சென்றார்.  படுகாயமடைந்த மணிகண்டன், வெங்கடேஷ் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags : brothers ,
× RELATED தட்டார்மடம் செல்வன் சகோதர்கள் இரண்டு...