×

ஒட்டன்சத்திரம் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை கணவர் வீட்டார் மீது புகார்

ஒட்டன்சத்திரம், ஜன. 22: ஒட்டன்சத்திரம் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்த பிரம்மசாமி மகள் முத்துலட்சுமி (24). இவருக்கும் பட்டையக்கவுண்டன்புதூரை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த  2018 பிப்.17ம் தேதி திருமணம் நடந்தது. லட்சுமணன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது மகளை பிரம்மசாமி வீட்டிற்கு அழைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தந்தை வீட்டில் தனியாக இருந்த முத்துலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்துலட்சுமி சகோதரர் பிரகாஷ் கன்னிவாடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணத்திற்கு வரதட்சணையாக கொடுக்க வேண்டிய ரூ.2 லட்சம் பணம், 5 பவுன் நகை கொண்டுவந்தால்தான் வீட்டில் இருக்க முடியும் என லட்சுமணன் குடும்பத்தினர் கூறி வந்தனர். இதனால் மனமுடைந்து முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். எனவே லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடமே ஆகுவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : teenage suicide victim ,Ottansatham ,
× RELATED மெஞ்ஞானபுரம் அருகே கூடுதல் வரதட்சணை...