நாங்குநேரி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைப்பு

நாங்குநேரி, ஜன.22: தினகரன் செய்தி எதிரொலியாக நாங்குநேரி அருகே இறைப்புவாரியில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டது.நாங்குநேரி அருகேயுள்ள இறைப்புவாரி கிராமத்தில் மின் மாற்றியிலிருந்து ஊருக்குள் சென்ற உயர் அழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வாக சென்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்து வந்தனர். மேலும் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியாகும் மக்களின் பார்வை பகுதியில் வெளியானது. இதை தொடர்ந்து நாங்குநேரி மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சரி செய்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு அச்சம் நீங்கியது. மேலும் உடனடியாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்களுக்கும் தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>