×

பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

கடையநல்லூர், ஜன.22:  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடையநல்லூர் ஒன்றியம் போகநல்லூரில்  பாரம்பரிய விளையாட்டு போட்டியும், இதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடந்தது.   இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் கடையநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் செல்லத்துரை, ஊர் நாட்டாண்மை கருத்தப்பாண்டி, முருகன், வனத்துறை அதிகாரிகள்அருமைக்கொடி, சசிகுமார், திமுக நிர்வாகிகள் மாடசாமி, முருகன், சுரேஷ், கண்ணன் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Tags : Pongal Game Match Gifting Ceremony ,
× RELATED பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா