×

தாம்பரம்-குண்டுமேடு இடையே மினி பஸ் இயக்க கோரி மக்கள் சாலை மறியல்

தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து பழைய பெருங்களத்தூர், குண்டுமேடு பகுதிக்கு எஸ்: 19 என்கிற மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கடந்த 6 மாதமாக இந்திரா நகர் வரை மட்டுமே சென்று குண்டுமேடு பகுதிக்கு இயக்கப்படாமல் இருந்தது. இதனால் குண்டுமேடு பகுதி மக்கள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

எனவே குண்டுமேடு பகுதிக்கு மீண்டும் மினி பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை அளித்தும் பஸ் இயக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்திரா நகர் அருகே சென்ற மினி பஸ்சை நேற்று திடீரென மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Tambaram-Gundumade ,
× RELATED தாம்பரம்-குண்டுமேடு இடையே மினி பஸ் இயக்க கோரி மக்கள் சாலை மறியல்