×

சென்னையில் பல்வேறு பள்ளிகளில் தீ விபத்து தடுப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி

பெரம்பூர்: வியாசர்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தீயை அணைப்பது, காஸ் சிலிண்டர்,  மின்சாரம், அடுக்குமாடி கட்டிடம், குடிசை வீடுகளில் தீப்பிடித்தால் எப்படி  அணைப்பது? என்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வடசென்னை மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராஜேஷ் கண்ணா உத்தரவின்பேரில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அதிகாரி அன்பழகன் மேற்பார்வையில் மூத்த அதிகாரிகள் கமலக்கண்ணன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தீ விபத்துக்களை தடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். தண்டையார்பேட்டை: மண்ணடி சிங்கர் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்து மாணவர்களுக்கு ெசய்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணா தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர்கள் ஏழுமலை, பழனி முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது? சிலிண்டர், ஆயிலில் தீ பிடித்தால் எப்படி அணைப்பது? தீயில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு பயிற்சி மாவட்ட அலுவலர்கள் அனுசுயா, மனோபிரசன்னா, நிலைய அலுவலர் வீரேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேப்போல் வண்ணாரப்பேட்ைட தீயணைப்பு நிலையம் சார்பில் வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தீ விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags : Chennai ,schools ,
× RELATED மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக...