×

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் வீடுகளில் 3 குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், ஜன. 22: திருப்பூர் 1வது மண்டலத்தில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில், சுகாதாரமற்ற முறையில் இருந்த 3 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர். திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உத்தரவின் பேரில், டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் வகையில் 500 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்களை கண்டறிந்து, அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி 1வது மண்டலம் 13வது வார்டுக்குட்பட்ட பாத்திமா நகர், ஆவாராங்காடு பகுதியில் உதவி கமிஷனர் வாசுக்குமார் தலைமையில் சுகாதார அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் சையது அபுதாகீர், குழாய் ஆய்வாளர் சுகுமார் மற்றும் பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 3 வீடுகளில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டதுடன், 3 குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்களிடம் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Tags : Houses ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...