×

மாநகரில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்

திருப்பூர், ஜன. 22:  திருப்பூரில் உரிய அனுமதியின்றியும், இடையூறாகவும் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை கோர்ட்டில் பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி எல்லைக்குள் அரசியல் கட்சினர் மற்றும் அமைப்புகள் அமைத்துள்ள கொடிக்கம்பங்கள், அகற்றப்பட்ட கம்பங்கள் குறித்த விவரங்களை, வரும் பிப்.10ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க, மாநகராட்சி கமிஷனருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அனைத்து கட்சியினருக்கும் உரிய அமைப்பு வாரியாக, வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் எழுத்துபூர்வமாக கட்சியினரிடம் வழங்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவையடுத்து, இதனை அகற்றி கொண்டு, முறையாக அனுமதி பெற்று பின்னர் கம்பங்களை அமைத்து கொள்ள அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு கட்சியினர் தரப்பில், இடையூறாக உள்ள கம்பங்கள் குறிப்பிட்டால் அவற்றை அகற்றிக் கொள்ள உறுதியளிக்கப்பட்டது. மேலும் நகரில் உள்ள பிற ஆக்கிரமிப்புகளை, பாரபட்சம் இன்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Tags : city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...