×

குன்னூர் அருகே மாமனாரை வெட்டிய மருமகன் கைது

குன்னூர், ஜன.22:குன்னூர் அருகேயுள்ள கரும்பாலத்தை சேர்ந்தவர் ரமேஷ். (26) இவரது மனைவி பியூலா (23).  ரமேஷ், பியூலாவை சொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பியூலா தனது கணவர் ரமேஷ் மீது கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அப்போது ரமேஷ்வீட்டில் நாட்டு துப்பாக்கி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கூறினார். இதை தொடர்ந்து கொலக்கொம்பை  போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுதங்களை பறிமுதல் செய்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். பியூலா குன்னூர் அருகேயுள்ள உலிக்கல்லில் வசிக்கும் தனது பெற்றோரான முருகன் (50) சாரதா (45) ஆகியோருடன் வசித்து வந்தார். பியூலாவை மற்றொருவருடன் திருமணம் செய்ய பியூலாவின் பெற்றோர் முயற்சி செய்தனர். இதையறிந்த ரமேஷ் இது குறித்து பியூலாவின் பெற்றோரிடம் கேட்டார்.

இதனால், தகறாறு ஏற்பட்டது.   ரமேஷ் வெட்டு கத்தியால் தனது மாமனார் முருகன் மற்றும் மாமியார் சாரதா ஆகியோரை வெட்டினார்.  படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்த கொலக் கொம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரமேஷை தேடி வந்தனர். நேற்று முன்தினம் ரமேஷை போலீசார் கைது செய்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குன்னூர் மாஜிஸ்த்ரேட் ரமேஷை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags : Son-in-law ,father-in-law ,Coonoor ,
× RELATED கும்பகோணம் அருகே மாமனார் அரிவாளால் வெட்டியதில் மருமகன் பலி