×

முதுமலை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு 196 இடத்தில் 382 கேமராக்கள் அமைப்பு

கூடலூர், ஜன. 22:முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை கணக்கெடுக்க 196 இடங்களில் 382 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் நேரடி மற்றும் தடயங்கள் மூலம் கணக்கெடுப்பு பணிகள் கடந்த மாதம் முவடைந்தது. இதை தொடர்ந்து புலிகள் கணக்கெடுப்பு பணிகளுக்கான கேமரா பொருத்தும் பணிகள் நேற்று துவங்கியது.

325 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள புலிகள் காப்பக உள்வட்ட வனப்  பகுதிகளான தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நெலாக் கோட்டை ஆகிய நான்கு சரகங்களில் தேர்வு செய்யப்பட்ட  196 இடங்களில் 382 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதையடுத்து, 25 நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கேமராக்களில் பதிவான ஊன் உண்ணிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். பின் கேமராக்களில் பதிவான புலிகள் விவரம் சேகரிக்கப்பட்டு இது குறித்த தகவல்கள் தேசிய புலிகள் காப்பக ஆணையத்துக்கு அனுப்பப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Tiger ,archive ,Mudumalai ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...