×

ரஜினிகாந்தின் பேச்சு திமிர்தனமானது கருத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்

கோவை,ஜன.21: பெரியார் குறித்து அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு திமிர் தனமானது. கருத்தை திரும்ப பெறாவிட்டால் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்தார். சென்னை செல்வதற்காக தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் நேற்று கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- இந்தியாவிலேயே முதன்முதலாக 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க உத்தரவிட்டுள்ள மகாராஷ்டிரா அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பெரியாரை பற்றி ரஜினிகாந்த் அவதூறாக பேசி இருப்பது கண்டனத்திற்குரியது. அவதூறு கருத்தை பரப்பிய அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்யவேண்டும்.

தனது அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று அவர் கூறியிருப்பது திமிர் தனமானது. போராடுகிற சக்திகளை கிண்டலாக பார்ப்பதற்கான பலனை ரஜினிகாந்த் அனுபவிப்பார். இந்துத்துவ சக்திகளின்  பேச்சை கேட்டு, அவர்களின் கைக்கூலியாக செயல்படும் அவர்,  இந்துத்துவ  சக்திகளின் கருத்துகள் எடுபடாது என்பதை  விரைவில் உணர்வார். நடக்காத செய்தியை வெளியிட்ட இந்துத்துவ நாளிதழின் தவறான செய்திகளை பேசி, திட்டமிட்டு பெரியாரை அவமானபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அவதூறு பரப்புவதற்காக சொல்லப்பட்ட பாசிச கருத்தே ரஜினிகாந்தின் கருத்து. பெரியார் குறித்த தனது கருத்தை அவர் திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் கூறினார்.

Tags : Rajinikanth ,speech ,
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...