×

சென்னம்பட்டி கல்குவாரியை ஆய்வு செய்ய கோரிக்கை

ஈரோடு, ஜன.22: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கோரிக்கை தொடர்பாக மனு அளித்துள்ளார். அதில், அந்தியூர் அருகே சென்னம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியின் அருகே பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். இந்த மலைப்பகுதி பறவைகள், விலங்குகள், கால்நடைகள் மற்றும் மனிதர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. விவசாய நிலத்தை ஒட்டியும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்திலும் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படும். பாறைகளை வெடிவைத்து தகர்க்கும்போது அதிர்வினால் மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். வனவிலங்குகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இயங்கி வரும் இந்த கல்குவாரி செயல்பட அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

Tags : Chennambatti Kalquari ,
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது