×

திருத்தணி நகராட்சி பகுதிகளில் பெயர் இல்லாத வழிக்காட்டி பலகைகள்

திருத்தணி, ஜன.22:  திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெயர்கள் இல்லாத வழிக்காட்டி பலகைகள் ஆங்காங்கே உள்ளது.  அந்த பகுதிக்கு வரும் வௌியூர் வாசிகள் வழித்தெரியாமல் அவதிப்படுகின்றனர். திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மா.பொ.சி சாலை, காந்தி ரோடு, கலைஞர் நகர், முருகப்பா நகர், எம். ஜி.ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் இரும்பு தகடால் ஆன பெயர் பலகைகள் வைக்கப்பட்டது. இதனால் புதிதாக வரும் வௌியூர் வாசிகள் பெயர்ப்பலகை கண்டு தங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு எளிதில் சென்று வந்தனர்.

இந்த நிலையில் விஷமிகள் பலர் பெயர் பலகைகள் மீது பல்ேவறு நோட்டீஸ்களை ஓட்டினர். இதனால் அந்தப்பெயர் பலகைகளில் உள்ள ஸ்டிக்கர்கள் தேய்ந்து மறைத்து விட்டன. இதனால் வௌியூர்களில் இருந்து வரும் பயணிகள் வழித்தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கின்றனர்.
வேலும் சிலர் வழிதவறி ேவறு இடங்களுக்கு செல்லும் அவலநிலை உள்ளது. மேலும், ஒரு சில பலகைகளில் உள்ள இரும்பு தகடுகளை சமூக விரோதிகள் சிலர் பெயர்த்து எடுத்து சென்றுவிட்டனர். எனவே, இதுபோன்ற விஷமிகள் மீது  நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சேதமடைந்த வழிகாட்டி பலகைகளை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : areas ,Thiruthani ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை