தொழிற்சாலைகள் தொழிலாளர் நல நிதியை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

சென்னை, ஜன. 22 : தொழிற்சாலைகள் ெதாழிலாளர் நல நிதியை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் தொழிலாளர் நலவாரிய ெசயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொழிலாளர் நல வாரிய செயலாளர் உமாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து, மலைத்தோட்ட நிறுவனங்கள், 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளியின் பங்காக 10, வேலை அளிப்பவர் பங்காக ₹20 மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.அதன்படி 2019ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை வரும் 31ம் தேதிக்குள் தொழிலாளர் நல வாரியத்தில் செலுத்த வேண்டும்.
எனவே 31ம் தேதிக்கு முன்பாக நிதியை ‘‘செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு “The Secretary, Tamil Nadu Labour welfare Board, Chennai 600 006” எனும் பெயரில் வங்கி வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Factories ,
× RELATED உடைந்து நாசமான சோலார் மின் தகடு