×

ஓசூரில் பாஜ சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

ஓசூர், ஜன.22: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜ சார்பில், ஓசூரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்த விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு நேற்று விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் திருவாரூர் காந்தி, மாநில எஸ்சி பிரிவு துணைத்தலைவர் சாமிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓசூர் ரயில் நிலைய சாலை, தாலுகா அலுவலக சாலை, உழவர் சந்தை சாலை உள்ளிட்ட இடங்களில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில், விருபாக்க்ஷா, தினேஷ், மோசஸ், பாப்பிரெட்டி, சுரேஷ், குருமூர்த்தி ரெட்டி, மஞ்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Baja ,Hosur ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...