×

நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

திருவாரூர், ஜன.22: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் இன்றும், நாளையும் நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஊரகப்பகுதி உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதற்காக மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான பயிற்சி முகாம் இன்றும் (22ம் தேதி), நாளையும் ( 23ம்தேதி) திருவாருர் மன்னார்குடி சாலையில் இருந்து வரும் பொன் தமிழ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூடுதல் கலெக்டர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலர் உட்பட பலரும் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளால் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

இதுமட்டுமின்றி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இதனையொட்டி முதல் நாளான இன்று திருவாரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் மற்றும் வலங்கைமான் ஆகிய 5 ஒன்றியங்களில் இருந்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மேலும் நாளை மன்னார்குடி வருவாய் கோட்டத்தில் இருந்து வரும் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஆகிய 5 ஒன்றியங்களில் இருந்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
எனவே இந்த பயிற்சியானது ஊராட்சி நிர்வாகத்தை செம்மையாக நடத்திட ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதால் இதில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வாக்களிக்க உற்சாகத்துடன் வந்த மாற்று திறனாளிகள், மூத்தோர்