×

நாளை நடக்கிறது கதிர் அடிக்கும் இயந்திரங்கள் வேளாண்துறை மூலம் வாடகைக்கு வழங்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, ஜன.22: கதிர் அடிக்கும் இயந்திரங்கள் வேளாண்துறை மூலம் வாடகைக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப் கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாவது: திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயி, விவசாய தொழிலாளார்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் கிடையாது. கடந்த 2018ம்ஆண்டு கஜாபுயல் பாதிப்பில் இருந்து இன்னும் விவசாயிகள் மீளவில்லை, கடந்த ஆண்டு தண்ணீர், உரதட்டுப்பாடு போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு விவசாயிகள் சாகுபடி செய்து தற்போது அறுவடைக்கு துவக்க உள்ள நிலையில் கதிர் அடிக்கும் இயந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வாடகை நிர்ணயம் செய்து உள்ளது. கூடுதல் வாடகை வாங்கினால் மாவட்ட நிர்வாகம், தாசில்தார் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை மூலம் கதிர் அடிக்கும் இயந்திரங்களை வாடகைக்கு விட வேண்டும். வேளாண்மை துறை அதிகாரிகள் அறுவடை முடியும் வரை தொடர்ந்து கண்கானிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி முறை மாறுபடுகிறது.

Tags : Farmers' Association ,Ministry of Agriculture ,
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...