வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


பாபநாசம், ஜன. 22: பண்டாரவாடை சாலையோரம் உள்ள அல்லி குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்ட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை பாபநாசம் அருகே பண்டாரவாடை ஆர்ச் அருகில் அல்லி குளம் உள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அல்லி குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் மெயின் சாலை வழியாக செல்கின்ற வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், அல்லி குளத்தை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...