×

மன உளைச்சலில் பெற்றோர் 5ம்தேதிக்குள் முறையாக சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன. 22: 5ம் தேதிக்குள் முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என்பன பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் பணியில் சேர்ந்து மாதம் ரூ.250 சம்பளம் பெற்று வரும் தண்ணீர் திறந்து விடும் ஆபரேட்டர்களுக்கு கணினி பதிவு செய்து முழு சம்பளம் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.6000 வழங்க 5ம் தேதிக்குள் முறையாக சம்பளம் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அரசாணைப்படி பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் ஒன்றிய தலைவர் காயாம்பூ முன்னிலையில் ஒன்றிய செயலாளர் ராமன் ஒன்றிய பொருளாளர் நடராஜன் மாவட்ட செயலாளர் திரவிய ராஜ் உள்ளிட்ட ஆபரேட்டர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன்டன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினார் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது முன்னதாக சங்கத்தின் பெயர் பலகை மாநில தலைவர் சண்முகம் திறந்து வைத்து பேசினார்.

Tags : Trade Union Employees ,parents ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்