×

பள்ளி பரிமாற்று திட்டத்தின்கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு பயிற்சி

விராலிமலை, ஜன.22: விராலிமலை வட்டார வளமையம் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பள்ளி பரிமாற்று திட்டதின்கீழ் விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேப்பூதகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராப்புற பள்ளியின் அமைப்பு, பாடப்பயிற்சி மற்றும் சுற்று சூழல் அமைப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. விராலிமலை அருகே உள்ள வடுகப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த7,8 ம் வகுப்பு மாணவியர்களுக்கு வடுகப்பட்டி அருகில் உள்ள மேப்பூதகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமப்புற பள்ளியின் அமைப்பு, பாடப்பயிற்சி, மாணவர்களின் நட்பு, சுற்றுச்சூழல் அமைப்பு முறைகள் குறித்து இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மேப்பூதகுடி நடுநிலைப்பள்ளியில் விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7 மற்றும் 8ம் வகுப்பு மாணிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமுக அறிவியல் போன்ற பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சிகளை மேப்பூதகுடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேசுராஜ் தலைமையில் ஆசிரிய ஆசிரியர்கள், சீனிசையதுமுஸ்தபா, விஜயலெட்சுமி, காமாட்சி பயிற்சியை அளித்தனர். மேலும் விவசாயம் குறித்த கள பணி முறைகள், கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

Tags : Government School Students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்