பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெற ஆண்டிமடம் பகுதி விவசாயிகளுக்கு அழைப்பு

ஜெயங்கொண்டம், ஜன. 22: பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு–்ளளது. பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை கிடைக்க பெறாத விவசாயிகள் தங்களது ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து சரி செய்து கொள்ளலாம். ஆண்டிமடம் வட்டாரத்தில் இந்த திட்டத்தில் பயன்பெறாத விவசாயிகள் தங்களது ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், கணினி சிட்டா ஆகிய ஆவணங்களை அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் வேளாண்மைத்துறை சார்ந்த மானிய திட்டங்கள் அனைத்தையும் உழவன் செயலியில் தெரிந்து கொள்ள கூகுள் பிலே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து புதிதாக விண்ணப்பித்தல், ஆதார் எண் சரி செய்தல் மற்றும் விண்ணப்ப நிலை ஆகியவற்றை மேற்கொள்ளலாம். ஏற்கனவே பதிவிறக்கம் செய்த விவசாயிகள் செயலியை அப்டேட் செய்து பயனடையலாம். இவ்வாறு ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More