×

விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரம்பலூரில் 2 நாட்கள் ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர்,ஜன.22: ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி நாளை, நாளை மறுநாள் (23, 24 தேதி) நடக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தலைவர் டாக்டர் ஜோதிலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் ஒன்றியம் எளம்பலூர் ஊராட்சிக்கு உட் பட்ட திருச்சி சென்னை-தேசிய நெடுஞ்சாலையில், செங்குணம் கைகாட்டி எதிரே அமைந்துள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்த இலவச 2 நாள் பயிற்சி நாளையும், நாளை மறுநாளும் (23,24தேதி) நடைபெற உள்ளது. இதில் ஜப்பானிய காடை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, காடைக்குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய் தடு ப்பு முறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள் பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் வேலை நா ட்களில் காலை 10மணிக்கு மேல் மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு கால்நடை மரு த்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 9385307022என் கிற செல்போன் எண்ணி லோ தொட ர்பு கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து கலந்து கொ ள்ளுமாறு கால்நடை மரு த்துவ பல்கலைக்கழக பயி ற்சி மற்றும் ஆராய்ச்சி மை யத்தின் தலைவர் டாக்டர் ஜோதிலட்சுமி வெளியிட் டுள்ள அறிவிப்பில் தெரிவி த்துள்ளார்.

Tags : Farmers Oversight Meeting ,Perambalur ,Japanese Quail Farming Training ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...