×

பயிர்களுக்கு ரசாயன மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதால் எதிர்மறை விளைவு ஏற்படுகிறது

அரியலூர், ஜன.22: பயிர்களுக்கு ரசாயன மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறது என வேளாண் அதிகாரி ெதரிவித்தார். பயிர்களுக்கு ரசாயன மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறது என வேளாண்துறையினர் தகவல். அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் மையத்தின் சார்பில் கீழப்பழூரில் நந்தியாறு கூழையாறு உபவடிவப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் கீழ் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகுத்து பேசுகையில் பயிர்களுக்கு ரசாயன மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவதனால் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறது. இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதுடன் நச்சுத்தன்மை தங்கி இறுதியில் பயிர் பாதுகாப்பு செலவும் அதிகரிக்கின்றது எனக் கூறினார்.
மேலும் வேளாண்மை துணை இயக்குநர் பழனிசாமி பேசுகையில் சூடோமோனஸ் பாக்டீரியாவை கொண்டு 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலமும், நடவு வயலில் 1 கிலோ சூடோமோனஸ் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூவுதல் மூலமும் நெற்பயிரை தாக்கும் பலவிதமான நோய்களை கட்டுபடுத்தலாம் எனக் கூறினார்.

வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி இரா.லதா பேசுகையில் நெல் வயலில் உள்ள குருத்து பூச்சியை கட்டுபடுத்திட டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியை 1 ஏக்கருக்கு 4000 (2சிசி) என்ற அளவில் நட்ட 30 மற்றும் 37 வது நாளிலும், நெல் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்திட நட்ட 37, 44, 51 வது நாளில் பயன்படுத்த வேண்டும் எனக் கூறினார். கிரீடு வேளாண் அறிவியல் மைய உழவியல் விஞ்ஞானி திரு அசோககுமார்; அவர்கள் ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 இடங்களில் பறவை இருக்கைகள் அமைத்து பூச்சிகளை சுற்றுச்சூழல் பாதிக்காமல் கட்டுப்படுத்தலாம் எனக் கூறினார்கள். வேளாண்மை அலுவலர் திரு.ஜான்சன்(மாநிலத் திட்டம்) அவர்கள் வயலில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் உயிரியல் பூச்சிக்கொல்லிகளான வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே தெளிக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது