×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை குமரி மக்கள் புறக்கணிப்பார்கள் பா.ஜ மாவட்ட தலைவர் அறிக்கை

நாகர்கோவில், ஜன. 22:  குமரி மாவட்ட பா.ஜ தலைவர் தர்மராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளில் மத சிறுபான்மையினராக வாழ்ந்து, மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி 2014 டிசம்பர் 11க்கு முன் இந்தியாவிற்குள் வந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கி அவர்களை பாதுகாக்கவே மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தை திருத்தியுள்ளது. இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல. இந்தியாவில் பெரும்பான்மையாக வாழ்பவர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு நாம் வழங்கும் சலுகைகள், உரிமைகள், பாதுகாப்பு அங்கு அவர்களுக்கு கிடைப்பதில்லை.

 பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டு தப்பிப்பிழைத்து நம்மை நம்பி வந்த நம் வம்சாவளி மக்கள் பல வருடங்களாக இங்கே வசித்து வந்தாலும், குடும்ப அட்டை, ஆதார், வாக்குரிமை உள்பட எந்த உரிமையும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறார்கள். அவர்களுக்கு நாம்தான் உதவ முடியும். அதற்காகத்தான் இந்த சட்ட திருத்தம். இந்த சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 130 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த சட்டத்திருத்தத் தின் மூலம் இந்திய குடியுரிமை சட்டத்திற்குட்பட்டு முறையாக இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்கள் உள்பட எவருக்கும் இந்தியாவில் குடியுரிமை ெபறுவதில் சிக்கல் எதுவுமில்லை.

மாறாக சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைபவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது. உண்மை நிலை இவ்வாறு இருக்க பாரத தேசத்தின் ஒரு சில பகுதிகளில் சில ேதசவிரோதிகள் ெவளிநாடுகளின் தூண்டுதலின் பேரில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்காமலும், அவர்களை புறக்கணித்து இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே ஆதரவு வழங்கி அமைதி காத்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : protests ,
× RELATED சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்