×

தாலுகா அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு அட்டை

திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த மக்கள், அரசின் இலவச மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கு, 50 கிமீ தூரம் உள்ள திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்றனர். இதனால் காலம், பணம் விரயம் ஆனது. இதனால், பெரும்பாலான மக்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெற முடியாமல் தவித்தனர். இதையடுத்து கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவின்படி, மக்கள் நலன்கருதி திருத்தணி தாலுகா அலுவலகத்தில், மருத்துவ காப்பீடு கார்டு பெறுவதற்காக தனி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருத்தணி தாசில்தார் ஜெயராணி கூறுகையில், திருத்தணி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய தாலுகாவை சேர்ந்த மக்கள், இனிவரும் நாட்களில் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கு, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. திருத்தணி தாலுகா அலுவலக முதல் மாடியில் இயங்கும் மருத்துவ காப்பீடு அலுவலகத்தில், விண்ணப்பித்து கார்டை பெற்று கொள்ளலாம். மருத்துவ காப்பீடு பெற விரும்புபவர்கள் ஆதார் கார்டு, வருமான சான்று ஆகியவை சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம் என்றார்….

The post தாலுகா அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு அட்டை appeared first on Dinakaran.

Tags : Taluk Office ,Thiruthani ,RK ,Pettai ,Pallipat ,taluk ,Dinakaran ,
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...