×

24ம் தேதி வரை நடக்கிறது தஞ்சையில் நடைபெற உள்ள இந்து மக்கள் கட்சி மாநாடு விளக்க டூவீலர் பிரசாரம்

சீர்காழி, ஜன.22: தமிழகத்தில் ஆன்மீகத்தின் மூலம் அரசியல் மாற்றம் ஏற்படுத்திடும் வகையில் மாநிலம் முழுவதும் மாநாடுகளை இந்து மக்கள் கட்சி நடத்தி வருகிறது. முதற்கட்டமாக கடந்த டிசம்பர் 1ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவிலான ஆன்மீக அரசியல் மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி சார்பில் வரும் பிப்ரவரி 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை திலகர் திடலில் மாநாடு, காவிக்கொடி பேரணி நடைபெற உள்ளது. சாராய, லஞ்ச, ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், கோயில்கள், பசுக்கள், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், கல்வி, மருத்துவம் வியாபாரமாவதை தடுத்திட வேண்டும், விவசாயம், தொழில் வளம் ஒங்கிட வேண்டும், நதி நீர் இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், நீராதாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இம்மாநாட்டினை மக்களிடையே விளக்கி ஆதரவு திரட்டும் நோக்கில் பிரசார பயணம் நடந்தது.மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் ராவ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ள இரு சக்கர வாகன பிரச்சார பயணம் நேற்று காலை சீர்காழி வந்தது. இந்தகுழுவினருக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர்.சுவாமிநாதன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து. சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் கண்ணன், நகர செயலாளர் சேகர், வை.கோயில் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : campaign ,convention ,Hindu People's Party ,Tanzania ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...