×

மயிலாடுதுறையில் குதம்பை சித்தருக்கு தை விசாக நட்சத்திர வழிபாடு

மயிலாடுதுறை, ஜன.22: மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் ஜீவசமாதி கொண்டுள்ள குதம்பை சித்தருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி குதம்பை சித்தர் தை விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குதம்பை சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழாவில் மயூரநாதர் கோயிலில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் செய்திருந்தார்.

Tags : Kuthambai Siddha ,Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...