×

கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கத்தில் புதிதாக திறக்க இருந்த அம்பேத்கர் சிலை அகற்றம்

கொள்ளிடம், ஜன.22: கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் புதியதாக வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே, ஆர்ப்பாக்கம் கிராமம் மந்தகரை என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதியதாக அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டு நேற்று திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை புதியதாக கட்டப்பட்ட, அம்பேத்கர் சிலையை உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதால் அதனை திறக்க அனுமதி மறுத்தனர். அதனைத் தொடர்ந்து சிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தது. இதனால் முன்னெச்சரிகை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை ஏ.டி.எஸ்.பி சாமிநாதன் தலைமையில் சீர்காழி டி.எஸ்.பி வந்தனா, புதுப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் 100க்கணக்கான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சீர்காழி தாசில்தார் சாந்தி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் கிராம மக்கள் சார்பில் அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டு அங்குள்ள கன்னிகோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று மீண்டும் அம்பேத்கார் சீலையை வைப்பதாக கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

Tags : Removal ,Ambedkar ,Colliery ,protest ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...