×

போலீஸ் குவிப்பு-பதட்டம் செம்போடை கிராமத்தில் விளையாட்டு கழக ஆண்டு விழா

வேதாரண்யம், ஜன.22: வேதாரண்யம் தாலுக்கா செம்போடை இளம்புயல் விளையாட்டுக் கழக 20ம் ஆண்டு விளையாட்டு விழா செம்போடை மேற்கு கம்பர் உதவி ஆரம்பப்பள்ளி அருகே நடைபெற்றது. விழாவிற்கு இளம்புயல் விளையாட்டுக் கழக நிறுவனர் மதியழகன் தலைமை வகித்தார். விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகந்நாதன் சித்த மருத்துவர் சொக்கலிங்கம் ஓய்வு பெற்ற வேலை வாய்ப்பு அலுவலர் காசிநாதன், கூட்டுறவு வங்கி இயக்குநர் நாகராஜன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இருபாலருக்கு ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், உயரம் தாண்டுதல், இசைநாற்காலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. நாகை மாவட்ட கராத்தே சங்க செயலாளர் வாசுதேவன் பரிசுகளை வழங்கினார். பின்னர் இரவு கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குரவப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் பரிசுகளை வழங்கினார்.முடிவில் ஜெயராமன் நன்றி கூறினார்.

Tags : village ,Sports Club ,Sembodai ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...