×

ஆயக்காரன்புலத்தில் பள்ளி பரிமாற்ற திட்டத்தில் மாணவர்கள் கலந்துரையாடல்

வேதாரண்யம், ஜன.22: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆயக்காரன்புலம் 4ம் சேத்தியில் கோவில்குளத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு களப்பயணம் சென்றனர். ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 20 பேர் பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் கீழ் கோவில்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அப்பள்ளி மாணவ-மாணவிகளோடு இறைவணக்கம், யோகா பயிற்சி பள்ளியில் பாடம் கற்பித்தல் பள்ளியின் சுற்றுசூழல் அறிதல் மாணவர்களின் கருத்து பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வியல் விவசாயம், உப்பு தயார் செய்யும் உப்பளப் பகுதியில் சென்று தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர். பின்னர் அங்குள்ள சிவன் கோயிலுக்கு சென்று தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பரஞ்சோதி பள்ளி ஆசிரியர்கள் விமலா, எழிலரசி, கோவில்குளம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருள்செல்வன், தமிழாசிரியர் வேதமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து,கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள் கோவில்குளம் பள்ளி வகுப்பறையில் சுற்றுசூழல் தூய்மை, மரம் வளர்ப்பு, நாணயம், தபால்தலை சேகரித்தல், மற்றும் உணவு பழக்க,வழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துக்கூறினர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...