மர்மமான முறையில் கன்று குட்டிகள் சாவு நடவடிக்கை எடுக்ககோரி விவசாயி தர்ணா போராட்டம்

கரூர், ஜன. 22: கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து நடவடிக்கை கோரி விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்., கரூர் திருமாநிலையூர் கடைத்தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி(35), விவசாயி. அப்பகுதியில் உள்ள நிலத்தில் ஆடுமாடுகளை வளர்த்து வருகிறார். அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 2 கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில்இறந்தன. இதுகுறித்து வேலுசாமி பசுபதிபாளையம் போலீசில் புகார் அளித்தார். கால்நடை மருத்துவர்கள் வந்து இரண்டு கன்று குட்டிகளையும் பிரேத பரிசோதனை செய்தனர். எதனால் இறந்தன என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அப்பகுதியில் சாயக்கழிவுநீர் சூழ்ந்துள்ளது. இதனை குடித்ததால் இறந்திருக்கலாம், எனவே பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டு சாயக்கழிவுநீரை பொதுப்பணித்துறையினர் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி நிலத்தில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வேலுசாமி தர்ணா போராட்டம் நடத்தினார்.

Tags : Farmer Darna ,death ,
× RELATED செல்போன் பறிப்பை தடுக்க முயன்ற கல்லூரி மாணவர் குத்திக்கொலை