×

திருக்காம்புலியூர் ரவுண்டானா வளைவு பாதையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் மின் கம்பத்தால் பாதிப்பு

கரூர், ஜன. 22: திருக்காம்புலியூர்  ரவுண்டானா வளைவு பாதையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை  வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவை சாலையில் சென்று திருக்காம்புலியூர் ரவுண்டானாவில் பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் ரவுண்டானாவுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கான சர்வீஸ் சாலை பிரிகிறது. இந்த சாலை பிரிவோரம் வர்த்தக நிறுவனங்களை ஒட்டி மின்கம்பம் உள்ளது. இதனால், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. எனவே இதனை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு வேறு பகுதிக்கு மாற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thirukkambuliyur Roundabout ,
× RELATED சமூக பரவலாக மாறவில்லை முழு ஊரடங்கால்...