×

ஜீவா மாண்டிச்சோரி பள்ளி ஆண்டுவிழா

ஆலங்குளம், ஜன. 21: ஆலங்குளம் ஜீவா மாண்டிச்சோரி பள்ளியில் 12வது ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் ராதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஏஞ்சல் பொன்ராஜ் முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு அரசு பணியாளர் ஒருங்கிணைப்பு மேலாளர் கல்யாணிசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசினார். பள்ளி ஆலோசகர் முருகன், உதவி துணை முதல்வர் மயிலம்மாள், ஆசிரியைகள் அருள் ஞான எஸ்தர், ஆன்ட்ரோ அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலு நாச்சியாரின் போராட்டக் கதை நாடகத்தை  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். மாணவி தங்கபாலா அதீத திறமைக்கான போட்டியில் பார்வையாளர்கள் கேட்ட அனைத்து வினாக்களுக்கும் பதிலளித்தார்.விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவர்கள் அபிநயா, சூர்யா, கவிஷ் ராஜா, மருது தர், பொன்னரசி, ஆல்பர்ட் ஜெனோ ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கபட்டனர். துணை முதல்வர் சவிதா ஷெனாய் நன்றி கூறினார்.

Tags : Jiva Montessori School Anniversary ,
× RELATED களக்காடு அருகே அப்பர்குளத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம்