×

வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

வள்ளியூர், ஜன. 21: தெற்கு வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் அருணாராமன் தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் முக்கண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்  பள்ளி மாணவர்கள், 4 குழுக்களாகப் பிரிந்து வண்ணக் கோலமிட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து மாணவர்கள் தமிழரின் பண்டைய விளையாட்டுகளை விளையாடி, மாட்டுவண்டி பயணம் செய்து உறியடித்து மகிழ்ந்தனர். கரகாட்டம், கோலாட்டம் கும்மி, வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. உழவர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Pongal Festival ,Vedic Vidyashram School ,
× RELATED பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா