நாங்குநேரியில் ஐம்பெரும் விழா

நாங்குநேரி, ஜன.  21: நாங்குநேரி தாலுகா மைய நூலகத்தில் மகளிர் மற்றும் சிறுவர் நூலக புதிய  கட்டிட திறப்பு விழா மற்றும் நாங்குநேரி நூலக 66வது ஆண்டுவிழா, மரம் நடுதல்,  தண்ணீர் பாதுகாப்பு குறித்த  விழிப்புணர்வு இயக்க தொடக்க விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடந்தது. நெல்லை  மாவட்ட மைய நூலக நூலகர் வயலெட் தலைமை வகித்தார். நாங்குநேரி நூலகர்  சதீஷ்குமார் வரவேற்றார். வாசகர் வட்ட தலைவர் மாடசாமி முன்னிலை வகித்தார்.  

சிறுவர் மற்றும் மகளிர் நூலக கட்டிடத்தை ஞானதிரவியம் எம்பி  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் நூலக ஆய்வாளர் காஜா முகைதீன்  மற்றும் நூலகர்கள் சங்கரன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  மார்க்கெட் ஜான்சிராணி, திருஞானசம்பந்தர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்  கஸ்தூரி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>