×

காரைக்குடி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி

காரைக்குடி, ஜன. 21: காரைக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சூரக்குடி நான்கு ரோட்டில் நேற்று இரவு திருச்சியை சேர்ந்த செய்தி தாள் நிருபர் வேளாங்கண்ணி (45). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான இளையான்குடி அருகே உள்ள முத்தூர் சென்றுவிட்டு அங்கிருந்து திருச்சி நோக்கி சென்றுள்ளார். அப்போது வேளாகண்ணி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது தனியார் பஸ் மோதியுள்ளது. இதில் வேளாங்கண்ணி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து செட்டிநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் வேளாங்கண்ணியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசாதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags : bus crashes ,Karaikudi ,
× RELATED காரைக்குடியில் இருமல், வயிற்று...