×

கழனிவாசல் சாலையில் வாகனங்களை கவிழ்க்கும் ஆபத்தான பெரிய பள்ளம் கவனிப்பார்களா அதிகாரிகள்?

காரைக்குடி, ஜன.21:  காரைக்குடி கழனிவாசல் சாலை ஓரங்களில் தடுப்பு கம்பி அமைக்காததால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. காரைக்குடி கழனிவாசல் சாலையில் தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தவிர இச்சாலை வழியாகத்தான் மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் செல்கின்றன. அதேபோல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பஸ்கள் அனைத்து வந்து செல்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வெளியூர் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சாலை வழியாகத்தான் வரவேண்டும். இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி மிக்க சாலையில் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. தமிழ்த்தாய் கோவில் சாலை சந்திக்கும் இடத்தில் சாலை ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது.

பகல் நேரத்தில் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியும். ஆனால் இரவு நேரத்தில் சாலை ஓர பள்ளங்கள் இருப்பது தெரியாது. இதனால் மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு விலகும் போது தடுமாறி விழ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சாலை ஒரங்கள் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும். ஆனால் சாலை அமைத்து பல வருடங்கள் ஆகியும் இதுவரை சாலை ஓரத்தில் கம்பி அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக ஆர்வலர் முத்து கூறுகையில், கழனிவாசல் சாலையில் தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. இச்சாலை ஓரத்தில் மலேரியா கால்வாய் செல்கிறது. தமிழ்த்தாய் கோவில் சாலை இணையும் பகுதியில் சாலை ஓரத்தில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இப்பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு அவ்வளவாக தெரியவாய்ப்பில்லை. இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது முற்றிலும் தெரியாது. இந்நிலையில் எதிரே வரும் வாகனத்துக்காக விலகும் போது பள்ளத்தில் விழ வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் ஒன்று கவிழ்ந்ததில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்பட வில்லை. டூவீலர்களில் செல்வோர் தினமும் விழுவது வாடிக்கையாக உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் முன்பு இப்பகுதியில் தடுப்பு கம்பி அமைத்து அதில் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றார்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...