×

தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மனாக திமுக ஒன்றிய செயலாளர் பதவியேற்பு

தேனி, ஜன. 21: தேனி ஊராட்சி ஒன்றிய சேர்மனாக தேனி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சக்கரவர்த்தி பதவியேற்றார். தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. இதில் மொத்தமுள்ள 12 ஒன்றிய கவுன்சிலர்களில் 6 இடங்களில் திமுகவும், ஒரு வார்டில் காங்கிரசும், 4 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றனர். இவர்கள் கடந்த 6ம் தேதி ஒன்றிய கவுன்சிலர்களாக பதவியேற்றனர். இதனையடுத்து கடந்த 11ம் தேதி ஊராட்சி ஒன்றிய சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.  இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தேனி ஒன்றிய திமுக பொறுப்பாளரும், தேனி ஊராட்சி ஒன்றிய 12 வது வார்டு ஒன்றிய கவுன்சிலருமான ம.சக்கரவர்த்தி சேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றார். மாலையில் நடந்த துணை சேர்மன் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் முருகன் துணை சேர்மனாக வெற்றி பெற்றார்.

இதனையடுத்து நேற்று தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேனி ஒன்றிய திமுக பொறுப்பாளர்  ம.சக்கரவர்த்தி ஊராட்சி ஒன்றிய சேர்மனாக பதவிபேற்றார். இவருக்கு தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம்.என்.ராமகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், தேனி ஊராட்சி ஒன்றிய துணை சேர்மன் முருகன், ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் கந்தவேல், நாகலட்சுமி, மாலா, கவிதா, தனலட்சுமி, தேனி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன், கம்பம் நகர பொறுப்பாளர் துரைநெப்போலியன், பேரூர் செயலாளர்கள் வீரபாண்டி சாந்தகுமார், பி.சி.பட்டி செல்வராஜ், கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவேல், தேனி ஊராட்சி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெகதீஸ், தினேஷ். ஞானமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குருசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Theni ,union secretary ,DMK ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...