×

தேவாரம் மலையடிவாரத்தில் மழை இல்லாததால் நிலக்கடலைக்கு சிக்கல்

தேவாரம், ஜன.21: தேவாரம் மலையடிவாரத்தில் நிலக்கடலை விவசாயத்திற்கு மழை நின்றதால் விளைச்சலில் சிக்கல் எழுந்துள்ளது. தேவாரம் மலையடிவாரத்தில் ஒவ்வொரு வருடமும் நிலக்கடலை விவசாயம் மிக அமோகமாக நடக்கும். கடந்த ஆண்டு மலையடிவாரத்தை ஒட்டியுள்ள நிலங்களில் நிலக்கடலை விதைக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை, தொடர்ந்து  பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. சென்னை வானிலை ஆய்வு மையம் இனிமேல் தென்மேற்கு பருவமழை பெய்யாது என அறிவித்துவிட்டது. இதனால் விவசாயம் செய்த நிலக்கடலை காடுகளில் மழை இல்லை. இதனால் ரூ.1லட்சம் வரை செலவு செய்து நட்ட நிலக்கடலை பயிரை காப்பாற்ற முடியாத நிலை உள்ளது.

சீசன் மாறி விதைத்த நிலக்கடலை பயிர் தொடர்ந்து விளையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு இங்கு அதிகமான அளவில் நிலக்கடலை விளைந்தது. தொடர்ந்து இதனையே விவசாயிகள் நம்பி கடந்த மாதம் விதைத்தனர். இதனால் நிலக்கடலை விவசாயம் முழுமை பெறாதநிலை உருவாகி உள்ளது. தற்போது பயிர்கள் அனைத்தும் மேல் மழை இல்லாத நிலையில் விளையாத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `` நிலக்கடலை சீசன் கடந்த 3 மாதத்திற்கு முன்பே முடிந்தாலும், மலையடிவாரத்தை ஒட்டி மீண்டும் மழையை நம்பி பயிரிட்ட பயிர்கள் விளையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது பனியினால் விளைவதில் சிக்கல் உள்ளது. மழையும் இல்லை’’ என்றனர்.

Tags : mountain range ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...