×

சின்ன வெங்காயம் விலை இரண்டு வாரத்தில் குறையும் தேனி தோட்டக்கலை அதிகாரிகள் உறுதி

தேனி, ஜன. 21: தேனி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை இன்னும் இரண்டு வாரத்திற்குள்ளேயே குறைந்து விடும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதுகுறித்து தேனி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொ) முருகன் கூறியதாவது: 900 ெஹக்டேர் பரப்பில் சின்ன வெங்காயம் 70 முதல் 80 நாள் பயிராக உள்ளது. சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை 90 நாட்களை கடந்த பின்னரே குறிப்பாக 95 நாட்களை எட்டிய பின்னரே அறுவடை செய்ய முடியும். எனவே, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெரும்பகுதி நிலத்தில் அறுவடை தொடங்கி விடும். தற்போது மார்க்கெட் விலை கிலோ 150 ரூபாயை விட அதிகமாகவே உள்ளது. (ஒரு கிலோ ரூ.200) இதனால் மக்கள் பல்லாரி வெங்காயத்தை கிலோ 50 ரூபாய்க்கு வாங்குகின்றனர். நடவுக்கு பயன்படும் சின்ன வெங்காயம் விதை ஒரு கிலோ 2600 ரூபாயினை தாண்டியது. இதனால் சிறு விவசாயிகள் விதைக்க தயங்கினர்.

தேனி தோட்டக்கலைத்துறை சார்பில் 200 ஏக்கருக்கு மானியத்தில் விதை வெங்காயம் வழங்கியது. தவிர வெங்காய விதைகளும் பல நுாறு ஏக்கருக்கு வழங்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இதே நிலை தான் நீடிக்கிறது. அனைத்து இடங்களிலும் இன்னும் 10 நாளில் அறுவடை தொடங்கி விடும். அந்த வெங்காயம் சந்தைக்கு வந்ததும் தற்போது கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கும் சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கும் கீழே இறங்கி விடும். கடந்த மூன்று மாதங்களாக ஏற்பட்ட கடுமையான விலை அதிகரிப்பின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் 15 நாட்களில் முற்றிலும் மீண்டு வர வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : Theni ,horticulture officials ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...