×

தேனி மாவட்டத்தில் விளைநிலங்களில் உள்ள டாஸ்மாக் அகற்றப்படுமா?

உத்தமபாளையம், ஜன.21: தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  அரசு டாஸ்மாக் கடைகள் விளைநிலங்களில் செயல்படுகிறது. இவற்றை அகற்றிட தேனிமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலையில் அதிக அளவில்  டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டன. இதனை அகற்றிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபின்பு கம்பம், உத்தமபாளையம், சின்னஓவுலாபுரம், கோகிலாபுரம், அனுமந்தன்பட்டி, சின்னமனூர், தேவாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும், விளைநிலங்களாக உள்ள தோட்டங்கள், காடுகள், உள்ளிட்ட விவசாய நிலங்களில் திறக்கப்பட்டு செயல்படுகிறது. இதனையும் கணக்கெடுத்து  கடைகளை மூடவேண்டும் என்று அரசியல்கட்சிகள், பல்வேறு  அமைப்புகள் கோ ரிக்கை விடுத்தனர்.ஆனால் நடவடிக்கை இல் லை. ஆனால் மாவட்டம் முழுவதுமே ஒதுக்குப்புறமாக இயங்குகிறது எனக்கூறி தோட்ட நிலங்களில்தான் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. எனவே, இவற்றை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `` தேனி மாவட்டத்தில் பல இடங்களில் இன்றைய சூழலில் 50க்கும் மேற்பட்ட கடைகள் விளைநிலங்கள், விவசாயம் செய்யக்கூடிய தோட்டங்களில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இதனால் சுற்றுச்சுசூழல் பாதிக்கிறது. வாய்க்கால் ஓரங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளால் குடிமகன்கள் மயங்கி கீழே விழுந்து உயிரை விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே, இவற்றை உடனடியாக மூடுவதற்கு தேனி கலெக்டர் உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

Tags : Tasmac ,farmlands ,Theni district ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்