×

அரசு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

மதுரை, ஜன. 21: அரசு பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்தக்கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதிக வருவாய் கிடைக்கும் வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்க அனுமதியளித்துள்ளனர். இதனால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு ேபாக்குவரத்துக்கழக அதிகாரிகள் துணையாக உள்ளனர்.

கரூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் மட்டும் தனியாரும், ஆளும்கட்சியினரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகின்றனர். ஆனால், இந்த தனியார் பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் நேர்வழி எனக்கூறி முக்கிய நகர பகுதிகளில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அதிகளவில் தனியார் பஸ்களையே நாடுகின்றனர். அரசு பஸ்கள் செல்வதற்கு முன்பாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அரசு பஸ்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் ஒதுக்கும் போது திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி பகுதிகளுக்கு புதிய பஸ்கள் ஒதுக்குவதில்லை. ஆட்டோவைப் போல தனியார் பேருந்துகளிலும் அதன் உரிமையாளர், பெர்மிட் விபரம், இயக்கும் பகுதிகளை எழுதி வைக்கவும், தனியார் பஸ்களுக்கு 5 நிமிடம் முன் அரசு பஸ்களை இயக்கும் வகையில் முறைப்படுத்தவும், தென்மாவட்டங்களுக்கு அரசின் புதிய பஸ்களை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ேநற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் மனு மீதான விசாரணையை பிப். 4க்கு தள்ளிவைத்தனர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது