×

ஆணையூர் ஊராட்சியில் டெங்கு தடுப்பு பணி ஜரூர்

சிவகாசி, ஜன. 21: சிவகாசி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு கிராமங்களுக்கும் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றார். இந்நிலையில், சிவகாசி அருகே ஆணையூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் அபேட் மருந்து தெளித்தல், உரல், தேங்காய் மட்டை, டயர்களில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றுதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுத்தல், கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்தல், அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துதல், காய்ச்சல் பாதித்தால் அவர்களை மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள தேவையான நடவடிக்கை எடுத்தல், பொது சுகாதாரத்தை பொதுமக்களே செய்து கொள்ளும் வகையில் பணிகளை செய்வதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி கொடுத்தல், தொடர்ந்து காய்ச்சல் பாதிகப்பட்ட இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், கொசு மருந்து அடித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டனர். இப் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags :
× RELATED பணம் திருடியவர் கைது