அதிக ஒளியால் நிலைகுலையும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வலியுறுத்தல்

திருச்சுழி, ஜன. 21: திருச்சுழி பகுதியில் செல்லும் வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாததால், அதிக ஒளியால் எதிர் வரும் வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.  திருச்சுழி பகுதியில் சமீபகாலமாக பஸ், லாரி, கார், பைக்குகளில் அதிக திறன் கொண்ட முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளில் கருப்புநிற ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது இல்லை. வாகனங்களின் முகப்பு விளக்கு அதிக பிரகாசத்தில் எரியவிடுவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலை குலைகின்றனர்.

இரவில் பஸ், லாரி கனரக வாகனங்களின் முகப்பு விளக்கு பிரகாசத்தை எதிரே வரும் டூவீலர் ஓட்டுபவர்கள் எதிர்கொண்டு ஒதுங்க முடிவதில்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. முன்பு இதுபோன்ற விதி மீறல்கள் இருந்தால், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்க அபராதம் விதித்து வந்தனர். ஆனால், தற்போது போக்குவரத்து போலீசார் இத்தகையை பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருச்சுழி பகுதியில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,
× RELATED பணம் இல்லை என்பதால் கருப்பு...