×

யூனியன் தலைவர் தேர்தல் முடிவை அறிவிக்கக்கோரி வத்றாப்பில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு, ஜன. 21: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தலில் திமுக 4, இ.கம்யூ-2 என திமுக கூட்டணியில் 6 பேரும், அதிமுக 6, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் 1 என கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றியத் தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல், தேர்தல் அலுவலர் வர்க்கீஸ் தலைமையில் வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. திமுக சார்பில் கண்ணனும், அதிமுக சார்பில் சிந்துமுருகனும் யூனியன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் யூனியன் அலுவலகத்தை சூறையாடினர். இதையடுத்து தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இந்நிலையில், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் தேர்தல் முடிவை உடனே அறிவிக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இ.கம்யூ முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், விசிக மாவட்டச் செயலாளர் சதுரகிரி, இ.கம்யூ.,மாவட்டச் செயலாளர் லிங்கம், வத்திராயிருப்பு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளர் அன்னக்கொடி, வத்திராயிருப்பு திமுக செயலாளர் குமார், இ.கம்யூ., நகர செயலாளர் கோவிந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,coalition parties ,union leader election ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி