×

கண்மாயில் கலக்கும் கழிவுநீர் ராஜபாளையத்தில் டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் மனு

ராஜபாளையம், ஜன. 21: ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் நகராட்சியில் உள்ள மலையடிப்பட்டி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப் போவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் சென்று மனு அளித்தனர். அந்த மனுவில், ‘மலையடிப்பட்டியில் டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்று வருகின்றனர். தேவாலயத்திற்கு செல்வோர் பயன்படுத்தும் பாதையாகவும் உள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் பிரசாந்த், நகர குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சிவஞானம் மற்றும் பலர் பங்கேற்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மலையடிப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மிகப்பெரும் போராட்டம் நடக்கும்’ என்றனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...