×

சத்திரப்பட்டி சாலையில் வாறுகால் அடைப்பு சீரமைப்பு

ராஜபாளையம், ஜன. 21: தினகரன் செய்தி எதிரொலியாக, ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில், ஓராமாக இருந்த வாறுகால் அடைப்பு சீரமைக்கப்பட்டது. ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டினர். அப்போது சாலையோரம் இருந்த கழிவுநீர் வாறுகாலில் மண் சரிந்ததால் அடைப்பு ஏற்பட்டது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி கடந்த ஒரு மாதமாக சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதனால், இப்பகுதி மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது. மேலும், சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயங்களில், டூவீலர், சைக்கிள் செல்வோர் மீதும், பாதசாரிகள் மீதும் கழிவுநீர் தெறித்தது. அருகில் உள்ள கடைகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் தெறித்து அவதிப்பட்டனர். இது குறித்து நமது தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, நகராட்சி சுகாதார துறையினர் உடனடியாக செயல்பட்டு, சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் ஏற்பட்டிருந்த வாறுகால்  அடைப்பை சீரமைத்தனர். மேலும், சாலையோரம் தேங்கி இருந்த கழிவுநீர் அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Sathrapatti ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி