×

டூவீலர் மீது பஸ் மோதி 2 கொத்தனார்கள் பலி

மதுரை, ஜன.21: டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கொத்தனார் 2 பேர் உயிரிழந்தனர். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வாடிப்பட்டி ராமராஜபுரத்திற்கு அரசு பஸ் நேற்று இரவு சென்றது. கொடிமங்கலம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக வந்த டூவீலர் மீது மோதியது.  இந்த விபத்தில் டூவீலரில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பெரியவீதியைச் சேர்ந்த கார்த்திக்(29), அவரது நண்பர் கண்ணன்(28) என தெரிந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bus crashes ,
× RELATED காரைக்காலில் ரூ.2 லட்சம் சாராய...