×

மணப்பாறை அருகே விஷவண்டுகள் தீவைத்து அழிப்பு

மணப்பாறை, ஜன.21: மணப்பாறையை அடுத்த மொண்டிபட்டி ஊராட்சி - போடுவார்பட்டி கிராமத்தில், சுப்புராம், ரவி, பால்ராஜ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலங்களும், தென்னந்தோப்பும் உள்ளது. இந்த தோப்பில் உள்ள தென்னை மரம் மற்றும் வேப்ப மரத்தில் விஷவண்டுகள் கூடு கட்டி அப்பகுதி விவசாயிகளை அச்சுறுத்தி வருவதாக விவசாயிகள் சார்பில் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் என்பவர் தகவல் அளித்தார். இதையடுத்து திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் புழுகாண்டி உத்தரவின்பேரில், மணப்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முருகவேல், கருப்பையா, முத்துசாமி, குமார் சரவணன் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று தீ பந்தத்தை காட்டி விஷவண்டுகளை அழித்தனர்.

Tags : Mannar ,
× RELATED தீவிரவாதிகளால் வெடிமருந்து...